நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்ட பாடகர் வேடன் - யார் அந்த பெண்?
புகழ்பெற்ற ராப் பாடகரான வேடன், தன்னுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பாடகர் வேடன்
சாதாரணமாக யூடியூப் தளத்தில் ராப் பாடல்களை எழுதி, தானே பாடி வெளியிட்டு, இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இளம் இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் தான் வேடன்.
இவர் சமூக அக்கறை, அரசியல் நுணுக்கம், தெரு வாழ்க்கையின் உண்மை முகம், இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் கொண்ட பாடல் வரிகளில் பாடல்களில் தயாரித்து தனக்கென ரசிகர் பட்டாளம் ஒன்றை வைத்தார்.

யூடியூபில் மட்டுமல்லாமல் வேடனுக்கு சினிமாவில் அங்கீகாரம் கொடுத்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். அந்த படத்தில் அவர் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இவர் பாடிய ராப் பாடல் வைரல் ஹிட் அடித்தது. இதனால் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. மிகவும் குறிய காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை எடுத்துக்கொண்டார் வேடன்.
இந்த நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வேடனின் திருமணம்
இந்த நிலையில் நேற்றைய தினம் பாடகர் வேடனுக்கு திடீர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. வேடன் என அழைக்கபடும் இவரின் உண்மையான பெயர் ஹிரன்தாஸ் முரளி ஆகும்.
இவர் திருமணம் முடித்த பெண் எழுத்தாளர் நவமிலதாவாகும். முளங்குன்னத்துக்காவில் உள்ள வேடனின் வீட்டில் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சாட்சியாக வைத்து திருமணம் நடந்துள்ளது.
செம்புக்காவு துணைப் பதிவாளர் வீட்டிற்கு வந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். வேடனுக்கு இணையவாசிகள் வாழத்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |