மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு தோசை செய்ய தெரியுமா? இந்த ரெசிபியில் செய்து பாருங்க
தினமும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு போரடித்து விட்டவர்களுக்கு மிக வித்தியாசமாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் தோசை செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மரவள்ளிக்கிழங்கில் மா சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றது. இது காலையில் பசியை கட்டுப்படுத்தி செரிமானத்தை சீராக்கும்.
அந்த வகையில் மரவள்ளிகிழங்கு தோசை எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - 2 கோப்பை
- உளுத்தம் பருப்பு - கால் கோப்பை
- பச்சரிசி - கால் கோப்பை
- மரவள்ளிக்கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது)- 1 கோப்பை
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- வரமிளகாய் - காரத்துக்கேற்ப
- பெருங்காயம் - அரை தேக்கரண்டி
- உப்பு ,நல்லெண்ணெய் , கொத்துமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
தோசை செய்வது எப்படி?
1. இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
2. பாதி அரைத்து கொண்டிருக்கும் பொழுது மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து அரைத்து எடுக்கவும். அதனுடன் வரமிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.
3. அரைத்து எடுத்த மாவுடன் ரவை கலந்து சரியாக 8 மணி நேரம் மூடி வைக்கவும்.
4. பின்னர் சீரகம், மிளகு, சோம்பு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை தூவி சேர்த்து நன்றாக கலக்கி 1 மணி நேரம் ஊறவிடவும்.
5. இறுதியாக தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி இறக்கினால் சுவையாக மரவள்ளிகிழங்கு தோசை தயார்.
முக்கிய குறிப்பு
தோசையில் வெங்காயம், காய்கறிகள் அல்லது வேறு ஏதாவது மசாலாக்களும் சேர்ந்து கொள்ளலாம்.