ஷோவில் கணவரை கை நீட்டி அரைந்த தொகுப்பாளர்.. வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் தூண்டி விட்ட பிரபலங்கள்!
ஷோவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசி கொண்டிருக்கும் போது தொகுப்பாளர் மணிமேகலை அவரின் கணவரை கை நீட்டி அரைந்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் சமையலுடன் நகைச்சுவையும் கலந்திருப்பதால் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றது.
மேலும் கடந்த 3 சீசன்களை சிறப்பாக முடித்து விட்டு தற்போது 4 வது சீசன் சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் பல பிரபலங்கள் இந்த ஷோவில் குக்காகவும் கோமாளியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
கணவரையே கை நீட்டிய மணிமேகலை
அந்த வகையில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்து சிவாங்கி தற்போது குக்காக இருந்து வருகிறார்.
அந்த வரிசையில் அடுத்து வருவது மணிமேகலை கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்து விட்டு தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இப்படியொரு நிலையில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் கணவன் - மனைவியாக நடித்து கொண்டிருக்கும் தன்னுடைய சொந்த கணவரை கை நீட்டி அரைந்துள்ளார்.
இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் பலமாக வரவேற்கப்பட்டது. இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படியா கணவரை அசிங்கப்படுத்துவது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்