6 மனைவிகளுக்காக பிரம்மாண்ட படுக்கையை உருவாக்கிய கணவன்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனக் கூறுவது எந்தளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால், திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்களும் திருமணத்தின் பின்பு அரங்கேறும் விடயங்களும் ஒரு நிமிடம் நம்மை வியக்க வைக்கின்றது.
அந்த வகையில் பிரேசில் நாட்டில் சாவோ பாலைவனப் பகுதியைச் சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ (37). இவர் 6 பெண்களைத் திருமணம் செய்துள்ள நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழந்தையை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தன் மனைவிகள் 6 பேருடன் ஒன்றாக படுக்கையை பகிர முடியவில்லை என்பது அவரது மிகப்பெரிய கவலையாக இருந்த நிலையில், அதற்காக ஒரு முடிவெடுத்துள்ளால் ஆர்தர்.
image - Times Applaud
அதாவது அவரது படுக்கை சிறியதாக இருந்ததால், அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியாமலிருந்துள்ளது. அதனால் அவர் ரூ.81 லட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்துள்ளார்.
இந்த படுக்கையை தயாரிக்க 15 மாதங்கள் சென்றுள்ளன. இதுகுறித்து ஆர்தர் கூறுகையில், “எனது வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமில்லாமல் ஆர்தருக்கு ஒன்பது மனைவிகள் இருந்துள்ளனர். கடந்த வருடம் மூன்று பேரை விவாகரத்து செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.