ஆண் உண்மையாகக் காதலித்தால்... இந்த அறிகுறிகள் இருக்குமாம்.
காதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது அவசியம்.
ஒரு சிலர் பொழுதுபோக்குக்காக காதலிக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் தேவைகளை முடித்துக்கொண்டு விலகி விடுகிறார்கள்.
ஆனால், ஒரு ஆணிடம் உண்மையான அன்பு இருக்கும் அந்த அன்பு என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதைப் பார்ப்போம்.
உங்கள் மகிழ்ச்சியை பெரிதாக நினைப்பார்
தனது மகிழ்ச்சியை விட துணைக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயங்களை செய்வார். ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது தான் அவர் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றும். இதுவே உண்மையான காதலின் அடையாளம்.
காதலிக்கு அளிக்கும் முன்னுரிமை
காலவோட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் நேரம் செலவழிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும் நிலையில், தனது காதலியுடன் நேரத்தை செலவிடுவதற்கு ஒரு ஆண் அதிகமாக முயற்சி எடுக்கிறான் என்றான் அவன் அந்த பெண்ணை உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம். உண்மையான அன்பு இருக்கும் பட்சத்திலேயே ஒருவரின் வாழ்வில் முக்கிய நபராக மாற முடியும்.
மிஸ்ஸிங்
அருகில் இருக்கும்போது தனது காதலியை நேசிப்பது என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தொலைவில் இருக்கும்போது தனது அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதில்தான் அவரது அன்பின் ஆழம் வெளிப்படும்.
கஷ்டங்களை பொறுத்துக் கொள்வார்
நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும்கூட உங்களுடன் அவர் இருக்கின்றார் என்றால் அவரது உண்மையான அன்பில் எந்த களங்கமுமில்லை.
அதிக காதல்
காதல் என்பது எடுப்பதில் அல்ல. கொடுப்பதில் இருக்கிறது. தங்கள் காதலியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை அள்ளி வழங்கினால் அந்த அன்பு உண்மையானது.