தாலி கட்டிய கையோடு புகழ் புது மனைவிக்கு அன்பு முத்தம்! திடீரென்று டிரெண்டாகும் புகழ் திருமண புகைப்படம்
குக் வித் கோமாளி புகழ் தாலி கட்டிய கையோடு மனைவிக்கு கொடுத்த அன்பு முத்தத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்டார்.
ஏ. ஆர். முருகதாஸின் ஆகஸ்ட் 16, 1947, அகில உலக சூப்பர் ஸ்டார் சிவானின் காசேதான் கடவுளடா, சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம், விஜய் சேதுபதியின் படம் என்று அடுத்தடுத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
புது மனைவிக்கு அன்பு முத்தம்
இந்நிலையில் புகழ் தன் நீண்ட கால காதலியான பென்சியாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தான் அவர்களின் திருமணம் நடந்தது.
திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். தாலிக்கட்டியவுடன் அன்பு பரிசாக தன் மனைவிக்கு நெகிழ்ச்சி முத்தம் கொடுத்துள்ளார்.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
