பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி
நடிகை மாளவிகா அவினாஷ்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானாவர்தான் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார். கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அண்ணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இதனையடுத்து, இவருக்கு ஜேஜே படத்தில் கதாநாயகி ஜமுனாவின் சகோதரியாக தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டினார். அதன் பின்னர், ஆறு, டிஷ்யூம், ஆதி உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். KGF படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மாளவிகா மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகை மாளவிகா அவினாஷ் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், "யாரவது ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.