வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த 3 தவறை செய்திடாதீர்கள்...எச்சரிக்கும் சாணக்கியர்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக அமைந்துள்ளது.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருமணதட்திற்கு முன்னரே வாழ்க்கை துணை குறித்து முக்கிய 3 கேள்விகளுக்கு விடையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
அப்படி அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கைத்துணையின் வயது
சாணக்கிய நீதியின் பிரகாரம் திருமணத்திற்கு முன்ரே வருங்கால வாழ்க்கை துணையின் வயதை நிச்சயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி உறவில் வயது வித்தியாசம் பெரியளவில் இருக்கும் பட்சத்தில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்வதால் வாழ்வில் பல வி்யங்களில் இருவருக்கும் இருவேறுப்பட்ட கருத்துக்கள் இருக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
வயது புரிந்துணர்வுடன் வலுவாக தாக்கம் செலுத்துவதால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் பெரியளவில் இருக்கவே கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
உடல் ஆரோக்கியம்
சாணக்கிய நீதியின் பிரகாரம் திருமணத்திற்கு முன்னரே வாழ்க்கை துணையின் உடல் நலம் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
துணைக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது ஏதேனும் கடுமையான உடல்நல பிரச்சினைகள் இருக்கின்றதா என்பது குறித்து அறிந்திருக் வேண்டும்.
திருமணத்தின் பின்னர் நோய்வாய்ப்பட்டிருந்தால் நிச்சயம் கூட இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகின்றது. எனவே இந்த விடயம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
கடுமையான நோய் உள்ளவர்களை வாழ்க்கை துணையாக நேர்ந்தெடுப்பதால் நீங்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாரக இருக்க வேண்டும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
கடந்த கால உறவு
சாணக்கிய நீதியின் பிரகாரம் வாழ்க்கை துணையின் கடந்த காலம் பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் யாருடனும் உறவில் இருந்தவரை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை வலுவாக பாதிக்க கூடும்.
கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க வாழ்க்கை துணை தயாராக இருக்கும் நிலையில் எந்த பிரச்சினையும் இருக்காது.
ஆனால் அது குறித்து தெரிந்துக்கொள்ளாமல் திருமண பந்தத்தில் இணைவது இருவரின் வாழ்க்கையையும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |