முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும்
பொதுவாகவே அனைவருக்கு தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.
குறிப்பாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவு செய்கின்றனர். பெண்களுக்கு முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதில் அலாதி இன்பம் என்றே கூற வேண்டும்.
ஆனால் எவ்வளவு தான் முகத்தை சிறப்பாக கவனித்துக்கொண்டாலும் ரசாயனம் கலக்கப்பட்ட அழகுசாதன பொருட்களின் பாவனை மற்றும் வயதாதல் போன்ற காரணங்களினால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முக அழகை வெகுவாக பாதிக்கின்றது.
அதனை தவிர்த்து என்றும் முகத்தை இளமையாகவும் பெலிவாகவும் வைத்துக்கொள்ள எந்த விதமான ரசாயனங்களும் கலக்கப்படாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் எவ்வாறு ஃபேஸ் பேக் தயார்செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஃபேஸ் பேக்
கற்றாழையில் அதிகளில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ செறிந்து காணப்படுகின்றது. இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும் என்று இளமையை காக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
சருமத்தை இறுக்கமடையச் செய்யும் குணம் அதில் செறிந்து காணப்படுவதால் இது சரும பாதுக்காப்புக்கு இன்றியமையாதது.
கற்றாலை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதனை முகத்தில் தடவி 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரையில் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெரும்.
அதனை தொடர்ந்து இரவு தூங்கும் முன்னர் செய்து வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படுவதோடு, சருமமும் விரைவில் பெலிவடைவதை கண்கூடாக பார்க்கலாம்.
பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளி பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் நெதியங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனால் சருமம் என்றும் இளமையாக இருக்கும்.
நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை நன்றாக மசித்து, அத்துடன் 1 தே.கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அந்த கலவையை முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊற வைத்து, அது நன்றாக உலர்ந்த பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் இயற்கையாகவே பெலிவடையும்.
இதனை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது காணப்படுவதால் சருமத்தக்கு இயற்கை முறையில் நீரேற்றத்தை கொடுக்கும்.
இதில் சருடத்துக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அதற்கு சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரையில் உலரவிட்டு குளிர்ந் தண்ணீரில் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் இயற்கை முறையில் என்றும் இளமை பொலிவுடன் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |