Numerology: இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு possessiveness அதிகமாம்... உங்க திகதி என்ன?
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடப்பிடுகின்றது.
அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் பாதுகாப்பற்ற உணர்வு கொண்டவர்களாகவும் துணையிடத்தில் அதிக பொஸசிவ் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் பழிவாங்கும் தன்மை சற்று அதிகமாகவே இருக்கும். இப்படிபட்ட குணம் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்களிடம் அதிகமாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 4 (4, 13, 22, 31)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் மற்றவர்கள் பணம் மற்றும் சொத்துக்களின் மீது ஆசைப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களின் முயற்சியால் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என நினைக்கும் இவர்களிடம் பாதுகாப்பற்ற உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும்.
அதனால் இவர்கள் அடிக்கடி மற்றவர்கள் மீது பொறாமைப்படும் நிலை ஏற்படுகின்றது. இவர்கள் வாழ்வில் போராடி பெற்ற விடயங்களை மற்றவர்கள் எளிமையாக அடையும் போது இவர்களுக்கு பொறாமை ஏற்படும்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் காதல் விடயங்களில் அதிக நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இதனையே அவர்கள் துணையிடமும் எதிர்பார்பார்கள் அப்படி நடக்காத போது இவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும் இது இவர்களை அதிக possessiveness கொண்ட நபராக மாற்றுகின்றது.
எண் 6 (6, 15, 24)
இந்த எண்களில் பிறந்த நபர்கள் அவர்களின் உள்ளார்ந்த பாதுகாப்பின்மை உணர்வால் அதிக பொஸசிவ் குணம் கொண்டவராகவும் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பிலேயே மற்றவரை்களை ஈர்க்கும் வசீகரமான தோற்றத்தையும் காந்தம் போன்ற பார்வையையும் கொண்டிருப்பார்கள்.
இருப்பினும் இவர்கள் விரும்பும் நபர்கள் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள்.
துணையை பிரியும் நிலையை இவர்கள் ஒருபோதும் விரும்புவது கிடையாது. இதுவே இவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வையும் possessive உணர்வையும் கொடுக்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |