கடலின் ராட்சத அலையில் சிக்கிய 3 பேர் - தூக்கி வாரிச்செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சி!
மூன்று அல் முக்சைல் கடற்கரையில் 3 பேர் மாட்டி அலை இழுத்து செல்லும் பதபதைக்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஜாட் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வந்துள்ளனர். ஈத் பண்டிகையை கொண்டாட ஓமன் சென்றுள்ளனர்.
42 வயதான ஷஷிகாந்த் மஹாமனே, அவரது 9 வயது மகள் ஸ்ருதி மற்றும் 6 வயது மகன் ஷ்ரேயாஸ் ஆகியோர் அரபிக்கடலின் வடமேற்குப் பகுதியான ஓமன் வளைகுடாவில் உள்ள கடற்கரையில் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றுள்ளது. இதன்பின்னர் தகவலறிந்து வந்த மீட்பு படையினர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
2 உடல்களை மீட்ட நிலையில், ஒரு சிறுமியின் உடல் கிடைக்காத நிலையில் தேடி வருகின்றனர். இச்சம்பவ குறித்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Your "Life" is more important than your "Likes". pic.twitter.com/3XNjyirbwJ
— Dipanshu Kabra (@ipskabra) July 13, 2022