மகாநதி சீரியல் குமரன் யார் தெரியுமா?
பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.
தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.
இந்த சீரியலில் குமரன் என்னும் கதாபாத்திரமானது, மிகவும் அப்பாவியானதும், நல்ல மனம் கொண்டவராகவும் இருக்கின்றார்.
இவரது உண்மையான பெயர் கமருதீன். சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பை முடித்ததும் மொடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அதனால் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மேகமோ இவள் டக்கவுட் கல்யாணம் என்னும் சில குறும்படங்களிலும் வீடியோ அல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நக்ஷத்ராவுடன் இணைந்து மெட்ரிமோனி விளம்பரத்திலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் சீரியல் மகாநதிதான். இவரது அப்பாவித்தனமான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
You May Like This Video