தவறி விழுந்த 4 மாத குழந்தை! ஹீரோவாக மாறிய அண்ணன்: வைரலாகும் காணொளி
விளையாடிக் கொண்டிருந்த தனது 4 மாத தங்கை சோபாவில் இருந்து கீழே விழப்போகும் தருணத்தில் 5 வயது அண்ணன் சாதூர்யமாக காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகில் அண்ணன் தங்கை பாசம் என்பது வார்த்தையினால் கூற முடியாததாகும். மேலும் வீட்டில் பிறக்கும் முதல் குழந்தைகள், அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டாவது அம்மாவாகவும், தந்தையாகவும் செயல்படுவதை நாம் அவ்வப்போது காணொளியில் அவதானித்து வருகின்றோம்.
இங்கு அதனை வெளிப்படுத்தும் விதமாக காணொளி ஒன்றினைக் காணலாம். 5 வயது சிறுவன் சோபாவில் அமர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 மாத குழந்தை நொடிப்பொழுதில் கீழே தவறி விழ சென்றது.
உடனே சுதாரித்த சிறுவன் குழந்தையின் உடையினைப் பிடித்து காப்பாற்றியுள்ளார். இக்காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.