படப்பிடிப்பின் போது தலை தெறிக்க பதறிய ஓடிய கீர்த்தி சுரேஷ்! ஏன் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
படப்பிடிப்பின் போது படகை நிறுத்துவதற்காக தலை தெறிக்க தான் ஓடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'மகாநதி' படத்தில் புகழ்பெற்ற நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகச் சிறிய வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பப்ளி நடிகையின் நடிப்பில் மிக சமீபத்தில் வெளியான 'ரங் தே' என்ற ரொமாண்டிக் காமெடி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கீர்த்தி தனது சமூக ஊடக பக்கத்தில் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "மை போட்" என்று கத்திக் கொண்டு ஓடுகிறார்.
"எனக்காக காத்திருங்கள்" என்று கூறும் அவர், பின்னால் திரும்பி "என் தொலைபேசி" என்று கேட்கிறார். இதனை யாரோ ரெக்கார்ட் செய்வதை உணர்ந்து, "பதிவை நிறுத்து" என்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 'ரங் தே' படப்பிடிப்பின் போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா', டோவினோ தாமஸுடன் 'வாஷி' மற்றும் 'சானி காயிதம்' உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.