பாம்பு புற்றில் பால் ஊற்றுவதற்கு இது தான் காரணமா?
இந்து சாஸ்திரத்தை பொருத்தவரையில் பாம்புகள் கடவுளாகவே பார்க்கப்படுகின்றன. அதன் காரணமாக தொன்று தொட்டு பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுவதும் முட்டை வைப்பதும் வழக்கமாகவுள்ளது.
அந்த காலாசாரத்தை தற்காலத்திலும் பெரும்பாலானவர்கள் பின்பற்றி வருகின்றனர். காலங்காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை வைக்கப்படுவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம் பாம்புகள் பால் குடிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? என்பது குறித்த சுவாரஸ்யமான விடயங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
என்ன காரணம்?
பண்டைய காலங்களில் மனிதனுக்கு மிகப்பெரும் பெரிய பிரச்சனையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்த உயிரினங்களில் பாம்புகள் முக்கிய இடம் வகிக்கின்றது.

அதாவது சில பிரதேசங்களில் மனிதர்களை விட பாம்புகள் அதிகமாக காணப்பட்டன. ஆனால் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இல்லை.
எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதன் விளைவாக தோன்றியதே பாம்பு புற்றில் பால் ஊற்றும் வழக்கம்.

அதாவது பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் முறைமை சற்று வித்தியாசமானது. பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) வெளிவிடும்.அதனை நுகர்ந்து தான் ஆண் பாம்புகள் பெண் பாம்பை தேடி வரும்.
இவ்வாறு பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை பாலில் இருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே பாம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை உருவாக்கப்படுகின்றது.

பாம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே உண்மையில் நமது முன்னோர்களால் பாம்பு புற்றில் பால் ஊற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |