மகாநதி சீரியல் சுவாமிநாதனுக்கு அடித்த ஜாக்போட்- அதுக்குள்ள அடுத்த வாய்ப்பா?
மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மகாநதி
பிரபல தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.

Super Singer: Grand Finale- ல் தாறுமாறாக வாக்குக்களை குவிக்கும் ரசிகர்கள்- முதல் இடத்தில் இருப்பவர் யார்?
இந்த சீரியலில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பு, சண்டை, ஆதரவு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகிறது.
மனநிலை சரியில்லாமல் இருக்கும் வெண்ணிலா மீது இரக்கப்பட்டு, காவேரி அவரை விஜய் வீட்டில் கொண்டு வைத்து சிகிச்சைக் கொடுக்கிறார். தற்போது சுயநினைவுக்கு திரும்பிய வெண்ணிலாவை விஜய் எனக்கு வேண்டும் என காவேரிக்கு எதிராக திரும்பி விஜய்- காவேரி வாழ்க்கையை பிரிக்க நினைக்கிறார்.
இந்த சமயத்தில், தான் விஜய்யின் குழந்தை காவேரி வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே போன்று காவேரியின் அக்காவும் கர்ப்பமாக இருக்கிறார். காவேரி கர்ப்பமாக இருக்கும் விடயம் விஜய்க்கு தெரியும், ஆனால் காவேரி குடும்பத்தினருக்கு தெரியாது.
காவேரி எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில், சுய நினைவுக்கு திரும்பிய வெண்ணிலா விஜயை திருமணம் செய்து விட வேண்டும் என்ற முடிவில் மீடியாவின் ஆதரவுடன் மிரட்டி திருமணம் செய்து கொள்ள திட்டம் போடுகிறார்.
அதே சமயம், காவேரியிடம் சென்று,“என்னுடைய விஜய் எனக்கு வேண்டும். அவரின் வாழ்க்கையில் இருந்து வெளியில் சென்று விடு...” என்கிறார். வெண்ணிலாவின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாத காவேரி,“ உன்னால் முடிந்தவற்றை செய்..” என அனுப்பி வைக்கிறார்.
வெண்ணிலாவின் பெற்றோரை விஜய் தான் கொலைச் செய்ய சொன்னார் என்று விஜய் சித்தப்பா கூற, பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த காவேரியை வெண்ணிலா தடுக்கிறார். உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் வெண்ணிலா,“ அவர் என்னுடைய புருஷன், நான் தான் அவருடைய பொண்டாட்டி அத யாருக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என கர்வமாக கூறுகிறார்.
காவேரியின் சுயரூபத்தை பார்த்து மிரண்டு போன வெண்ணிலா என்ன செய்வது என புரியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
புதிய வாய்ப்பு
,இப்படி மகாநதி சீரியல் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், இந்த சீரியல் மூலம் சின்னத்திரை பிரபலமாக இருக்கும் சுவாமிநாதன் பற்றிய புதிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் சுவாமிநாதன் தெலுங்கில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். “ஆட்டோ விஜயசாந்தி” என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் நாயகியாக “நீ நான் காதல்” சீரியல் புகழ் வர்ஷினி நடிக்கிறார்.
இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீரா தொடரின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தி அறிந்த சுவாமிநாதன் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |