பணப்பிரச்சினையால் அல்லோலப்படுகிறீர்களா? சிவராத்திரி தினத்தில் இதை செய்யுங்கள்!
சிவராத்திரி தினத்தில் சிவனை இப்படி வழிபட்டால் உங்கள் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து போய் விடும்.
சிவராத்திரி பண்டிகை
சிவனுக்கு உரிய சிவராத்திரி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிறப்பு மிக்க நாள் தான் சிவராத்திரி.
இந்த ஆண்டு சிவராத்திரி தினமானது சனிக்கிழமை 18ஆம் திகதி வருகின்றது. இந்த ஆண்டின் சிவராத்திரியானது மிகப்பெரிய சிறப்பு மிக்கதாகும்.
இந்த சிவராத்திரியில் பிரதோஷமும், கும்பத்தில் சனியும் சூரியனும் இணைந்திருக்கிறார்கள். வழக்கமாக சிவராத்திரி தினத்தில் சிவ பக்தர்கள் அனைவரும் சிவ அருளை வேண்டி சிவனை மனதில் நினைத்து விரதமிருந்து வழிபட்டால் எல்லா பிரச்சினைகளையும் தீர்ந்து விடும் என்பதும் ஜோதிட சாஸ்த்திரம் சொல்கிறது.
செய்ய வேண்டிய பரிகாரம்
இப்போதுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பணப்பிரச்சினை, வியாபார பிரச்சினை எனப் பலப்பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இந்தப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சிவராத்திரி தினத்தில் இந்தப் பரிகாரங்களை செய்யுங்கள்.
1.நீங்கள் தொழில் புரியும் இடத்தில் பல சிரமங்களை சந்தித்தித்தால் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவலிங்கத்திற்கு தேன் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொல்லி பிரார்த்தித்தால் உங்கள் தொழில் பிரச்சினைகள் தொலைந்தே போய்விடும்.
2. நீங்கள் சம்பாதிக்கும் பணம் கைமீறி செலவாகிறது என்றால் மகா சிவராத்திரி தினத்தன்று சிவனை நினைத்து விரமிருந்து, தயிர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் தீராத பணப்பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்தே விடும்.
3. உங்கள் சொந்த தொழில் இன்னும் முன்னேற்றமடையாமல் இருக்கிறதா அதற்கு சிவராத்திரியன்று கரும்புச்சாறு கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். இது தவிர, தேன் மற்றும் நெய் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும் இதனால் உங்கள் வியாபாரம் விருத்தியாகும்.
4. நீங்கள் மனதில் நினைத்தகாரியம் கைகூடாமல் இருந்தால் சிவராத்திரி நாளில் சிவனுக்கு உங்களுக்கு பிடித்த பொருட்களால் அபிஷேகம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம், உங்களின் ஆசைகள், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நினைவேறும்.
எவ்வாறாயினும் எண்ணியதை கொடுப்பவர் சிவன், ஆகவே சிவராத்திரி தினத்தில் முழு மனதோடு சிவனை வேண்டி சிவமந்திரம் சொல்லி வந்தால் உங்கள் அனைத்து தொல்லையும் தொலைந்து போகும்.