என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்பட நடிகைக்கு டும் டும் டும்!
தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.
பொதுவாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 27 வயதாகும் மேகா ஆகாஷூக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனையே திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
எனினும் இதுவரையில் இந்த திருமணம் குறித்து நடிகை மேகா ஆகாஷ் எதுவித கருத்தும் தெரிவிக்காத நிலையில்,
அவரது அம்மா கூறுகையில், “யாரோ ட்விட்டரில் மேகாவுக்கு திருமணம் என்று எழுதியிருக்கிறார்கள். அந்தப் பதிவுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. மேகாவுக்கு திருமணம் செய்வதாக இருந்தால் அதை நாங்கள் முன்னதாகவே முறைப்படி அறிவிப்போம்.
மேகாவின் திரைப்படங்கள் ரிலீஸின்போது கூட இவ்வளவு பேர் தொலைபேசி அழைப்பில் பேசியதில்லை. ஆனால், இப்போது மேகாவுக்கு கல்யாணமான்னு நிறைய தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணமே உள்ளது. இந்த திருமணம் செய்தி என்பது மிகவும் தவறான ஒரு செய்தியாகும்” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களைக் குறித்து பல வதந்திகள் வருவது இயல்பானதுதான். எனவே இந்தச் செய்தியும் வெறும் வதந்தியாக இருக்குமோ என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.