இந்த சிகிச்சை அவசியம்.. 100% குறட்டை நின்று விடும் உறுதி
சிலருக்கு தூங்கும் பொழுது குறட்டை விடும் பழக்கம் இருக்கும். இது அவர்களின் ஆரோக்கிய குறைபாடு மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படுகிறது.
குறட்டை விடுவது சாதாரணமாகத் தோன்றினாலும், அது தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெறும் குறட்டை தானே என பலரும் ஏளனமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் உடல்நலக் கோளாறான தூக்கத்தில் மூச்சுத்திணறலின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.
குறட்டை விடுவதற்கான வேறுபாட்டை புரிந்து கொள்வது உங்களது தூக்கத்தையும், வாழ்நாளையும் பாதுகாக்க வேண்டும்.
அந்த வகையில், குறட்டை வருவதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என்பவற்றை எமது பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
குறட்டை ஆபத்தானதா?
குறட்டை என்பது பொதுவாக தொண்டையில் உள்ள தளர்ந்த திசுக்களில் காற்று ஊடுருவும் பொழுது ஏற்படும் அதிர்வுகளின் இயற்கை ஒலியாகும். இந்த குறட்டை விடும் பழக்கம் சோர்வான நிலை, வயதானதன்மை, மது பழக்கம், தூக்க நிலை கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் வருகின்றது.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
தூக்கத்தை தடைசெய்யும் வகையில் ஏற்படும் மூச்சுத்திணறல் (Obstructive Sleep Apnea - OSA) எனப்படுகிறது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காற்றுப் பாதை முற்றிலுமாக அல்லது பகுதியளவில் அடைத்த பிறகு, சில விநாடிகள் சுவாசம் தடைபடும். இதனால் கூட குறட்டை வரலாம். இந்த பிரச்சினை ஒரு மணி நேரத்தில் பலமுறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் சிலரின் மூளை தானாகவே விழித்தெழும்.
வேறுபாடு
சாதாரணமாக விடும் குறட்டைக்கும், மூச்சுத்திணறல் காரணமாக வரும் குறட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. அப்படி, சாதாரணமாக வரும் குறட்டையின் ஒலி சமமாக இருக்கும். சத்தம் மாறாமல் தொடரும். அதே போன்று மூச்சுத்திணறல் இருந்தால் குறட்டை நின்று நின்று வரும்.
இது சுவாசத்தில் இடைநிறுத்தங்கள் காரணமாக ஏற்படுகிறது. இதனால் குறட்டை விடும் பழக்கம் கொண்டவர்கள் பகல் நேரத்தில் அதிக தாக்கம் ஏற்படும். சாதாரண குறட்டை உள்ளவர்களுக்கு பகலில் சோர்வோ, கவனம் சிதறலோ இருக்காது, ஆனால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு சோர்வு, தூக்க சிக்கல், கவனம் செலுத்த இயலாமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், சாதாரண குறட்டையில் விழித்தெழுதல் இயல்பாக இருக்கும், மாறாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், வாய் வறட்சி, காலை தலைவலி உள்ளிட்ட காரணங்களால் தூக்கமின்மை ஏற்படும்.
சிகிச்சைகள்
1. CPAP இயந்திரத்தின் மூலம் சிகிச்சை கொடுக்கலாம். இது தூக்கத்தின் போது காற்று அழுத்தத்தை நிலைநாட்ட உதவியாக இருக்கிறது.
2. மார்பு/வாய்வழி சாதனங்கள் மூலம் சிகிச்சை கொடுக்கலாம். இது காற்றுப்பாதையைத் திறந்து வைத்திருக்கச் செய்யும்.
3. உடல் பருமன் குறைப்பும் குறட்டை பிரச்சினையை குறைக்கும் வழியாக பார்க்கப்படுகிறது.
4. கடுமையான தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.
குறட்டை விடுவது வேடிக்கையாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம். ஆனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட நேர சோர்வோ, சுவாச இடையூறோ இருந்தால் உரிய மருத்துவரை பார்க்க வேண்டும். ஆரோக்கியமான தூக்கம் மனித வாழ்க்கை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |