புத்தாண்டில் முதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்! விவாகரத்து தகவல் உண்மையா?
பிரபல நடிகை நயன்தாரா, விக்னேஸ் சிவனை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய நடிப்பு திறமையால் முதலிடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா.
இவர் கடந்த வருடம் ஜீன் 9 ஆம் திகதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து,இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் திருமணம் தொடக்கம் குழந்தைகள் வரை தமிழ் சினிமாவில் பேசும் பொருளாக காணப்பட்டு வருகிறது.
வைரலாகும் வதந்திகள்
இந்நிலையில் திருமணம் முடிந்து திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்திகள் வைரலாகும் நிலையில் நயன்தாரா குழந்தைகள் மற்றும் திரைப்படங்கள் என்று பிஸியாக இருக்கிறார்.
இருந்த போதும் இது போன்ற வதந்திகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இது குறித்து நயன்தாரா தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.