எந்த நடிகரும் படைத்திராத ட்விட்டரில் புதிய சாதனையை படைத்த தனுஷ்- கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தமிழ் நாட்டின் புரூஸ்லி என அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ்.
தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
இதையடுத்து, தனுஷ் பல சாதனைகளுக்கு சொந்த காரர்களாக இருந்தாலும் தற்போது தனுஷை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது நடிகர் தனுஷ் டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னெவென்றால், நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது.
மேலும், டுவிட்டரில் 1 கோடி பாலோவர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் தனுஷ். நடிகர் தனுஷின் இந்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.