சனி பகவானின் ஆசி பெற்ற ராசிகள் எது தெரியுமா? அவர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்.
சனி பகவானின் ஆசியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிரிஷ்டம் என்று இந்த பதிவில காணலாம்.
சனியின் உதயம்
ஜோதிடத்தில் முக்கியமான கிரகமாக இருக்கும் சனி பகவான் ராசி மற்றத்தினை நினைத்து பலரும் பயப்படவே செய்வார்கள். ஏனெனில் சனிபகவான் தண்டிக்கும் கடவுகளாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால் நாம் செய்யும் நன்மை, தீமைக்கு தக்கதாகவே சனிபகவானின் செயல்களும் இருக்குமாம். அந்த வகையில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருக்கின்றார்.
அந்த வகையில் எந்தெந்த ராசியினர் சனி பகாவானின் ஆசிர்வாதத்தை பெற போகிறார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

மகரம்
பொதுவாகவே சனி பகவானின் பிடித்த ராசியாக கருதப்படுவது மகர ராசி என்பதால் இந்த ராசியினர் மீது அவருக்கு தனி பாசம் உண்டு. இதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல கடின உழைப்பாளிகளாவும், தாம் செய்ய நினைக்கின்ற வேலையை விடாமுயற்சியுடன் செய்வபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தோல்வியை சந்தித்தாலும் முடிவில் அவர்கள் வெற்றியையும், செல்வத்தையும் பெறுவார்கள்.ய

கும்பம்
மகர ராசியை போலவே கும்ப ராசியானது சனி பகவானின் வீடாக கருதப்படுகிறது. இந்த ராசியிளர் மிகவும் நேர்மையானவர்களாகவும், மற்றவர்கள் தேவைப்படும் நேரத்தில் உதவும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சனி பகவானின் பிடித்த குணமான நேர்மையை பின்பற்றுவதால் இவர்கள் ஆபத்து காலத்திலும் மற்றவர்களிடம் உதவி கிடைக்கும். அது மட்டுமின்றி, அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் அவர்களுக்கு கிடைக்கும்.

துலாம்
இந்த ராசியில் சனி பகவானின் அருள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் இந்த ராசிக்காரர்களுக்கு கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்ட மாட்டார். ஏனென்றால் அவர்கள் கும்ப ராசியை போல் நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள். இதனால் இவர்களுக்கு அதிர்ஷ்டமும், தொழில் வளர்ச்சியும் அவர்களை தேடி வரும்.
ரிஷபம்
பொதுவாகவே ரிஷப ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பார். அப்படி இருந்தாலும் சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆகும். இதனால் அவர்களுக்கு எப்போதும் சனி பகவான் கணிவான பார்வையை வைத்திருப்பார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் சனி பகவான் அவர்களை பாதுகாப்பார். இதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய தடைகள் வராது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |