சாணக்கிய நீதி - வெற்றிக்கான தாரக மந்திரம் 3.. என்ன தெரியுமா?
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு மூன்று விஷயங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இருந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

சாணக்கிய நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.

இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு என்னவெல்லாம் தந்திரத்தை பின்பற்ற வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கட்டுப்படுத்துங்கள்
- வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு இக்கட்டான சூழ்நிலை வரும். அப்போது நமது கட்டுப்பாட்டை இழக்காமல் அதை அமைதியாக கையாளுவது அவசியம் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் திறமை கொண்ட எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறி உ்ளளார். ஒரு விடயத்தை ஆரம்பித்து விட்டால் அதை இடைவிடாமல் முடிக்கும் வரை ஓயாமல் போராட வேண்டும். இந்த பண்பு ஒருவரிடம் இருந்தால் அவர் வெற்றி பெறுவது சாத்தியம். அதுவும் அது சாதாரண வெற்றியாக அது இரு்ககாது.
அதிர்ஷ்டத்தை சார்ந்திருக்க கூடாது
- பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் வெற்றிபெற அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு எவரும் தங்கள் விதி மற்றும் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். மாறாக, எத்தகைய சூழலிலும் கடினமாக உழைக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். கடினமாக உழைத்து கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள ஒரு நபர் முன்வந்தால், அவர் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க இயலாது.
பலவீனத்தை பகிர்ந்து கொள்ளக்கூடாது
- எந்தச் சூழ்நிலையிலும், ஒரு நபர் தனது பலங்களையோ அல்லது பலவீனங்களையோ பிறரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். காரணம் உங்களின் இந்த ரகசியங்களை, எதிரிகளோ அல்லது போட்டியாளர்களோ தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்திக்கொள்ளவார்கள் என்று கூறப்படுகின்றது. இது மட்டுமின்றி, நிதி இழப்புகளை வெளிப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளவோ கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).