பிரியாணி சாப்பிட்ட செவிலியர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்த நிலையில், 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி(33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், சில தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் இருந்த ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரேஷ்மிக்கு மட்டுமின்றி இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவிலியர் இறந்ததையடுத்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது தரமற்ற உணவுகளை கண்டறிந்துள்ளனர். பின்பு குறித்த கடைக்கு சீல் வைத்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.