PAN கார்டு தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் வாங்குறதுக்கு இதோ வழிமுறைகள்
நிரந்தரக் கணக்கு எண் (PAN) கார்டு தொலைந்துவிட்டால் எவ்வாறு நகல் எடுப்பதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
PAN கார்டு
நிரந்தரக் கணக்கு எண் (PAN) கார்டு இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கு மிகவும் முக்கியமானது.
வருமான வரித் துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண் இது, வருமான வரி வருவாயைத் தாக்கல் செய்தல், வங்கிக் கணக்குகளைத் திறத்தல் என பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகின்றது.
உங்களது PAN கார்டு தொலைந்துவிட்டால் நீங்கள் எளிதாக டூப்ளிகேட் PAN கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
NSDL வலைத்தளத்திற்குச் சென்று பக்கத்தின் மேலே உள்ள 'PAN கார்டை மறுபதிப்பு செய்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் உங்களது PAN எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி இவற்றினை உள்ளிட வேண்டும்.
பின்பு உங்களது மின்னஞ்சல் அல்லது மொலைல் எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல்(OTP) அனுப்பப்படும்.
தொடர்ந்து மொலைபல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி உங்கள் அசல் PAN கார்டில் பதிவுசெய்யப்பட்டதற்குச் சமமாக இருப்பதை உறுதிசெய்யவும்.
உங்களுக்கு வந்து OTP-ஐ அதில் பதிவு செய்து சமர்ப்பிக்கவும். டூப்ளிக்கேட் கார்டுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு, வழக்கமாக கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செய்யலாம்.
கட்டணத்தை செலுத்திய பின்பு உங்கள் டூப்ளிகேட் PAN கார்டை அச்சிடக் கோரும் விருப்பம் உங்களுக்கு இருக்கும் நிலையில், பின்பு உங்களது மொபைல் நம்பருக்கு உறுதிப்படுத்தும் தகவல் அனுப்பப்படும்.
மறுபதிப்பு செயல்முறையின் போது தற்போதுள்ள விவரங்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. டூப்ளிகேட் PAN கார்டு உங்கள் அசல் PAN பதிவில் பதிவுசெய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் வழங்கப்படும்.
டூப்ளிகேட் PAN கார்டு வருமான வரித் துறையில் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |