இந்த கஞ்சி தினம் ஒரு கப் குடிங்க - தொப்பை கொழுப்பு கரைந்து போகும்
உடல் எடையைக் குறைக்க முயற்சித்து வருகிறீர்களா? அப்படியானால், உணவுப் பழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
குறிப்பாக, உடலில் தேங்கியுள்ள அத்தியாவசியமல்லாத கொழுப்புகளை கரைக்கும் வகையில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதற்காக தான் பதிவில் ஒரு சிறப்பான ரெசிபி கொடக்க போகிறோம். அதாவத இந்த கஞ்சியை தினமும் காலையில் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து போகும்.
தேவையான பொருட்கள்
- வரகரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
- கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - சுவைக்கேற்ப
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் - 6 டம்ளர்
- கொத்தமல்லி - சிறிது
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 3-4 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் நீரை ஊற்றி கொத்தமல்லியை சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான வரகரிசி வெஜிடேபிள் கஞ்சி தயார். இதை தினமும் ஒரு கப் குடித்து வாங்க தொப்பை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
