இந்த ராசிக்காரர்கள் தங்கள் திருமண உறவில் நீண்ட காலம் நிலைத்திருப்பார்களாம்
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்தின் பின்னர் கணவன் மனைவி சேர்ந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கின்றது.
காரணம், உறவுகளுக்குள் புரிந்துணர்வும் நம்பிக்கையும் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அதை தம்பதியருக்கிடையில் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகிறது.
image - stylecreze
அதேபோல் 12 இராசிகளுக்கும் வெவ்வேறு விதமான குணாதிசயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் தனது திருமண வாழ்வில் பொறுமையோடு புரிந்துணர்வோடும் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போமா...
ரிஷபம்
உறவுகளிடம் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். எதையும் பொறுமையாக கையாள்வார்கள். தங்களை சுற்றியிருப்பவர்களை மதிக்கும் மனநிலை கொண்டவர்கள்.
கடகம்
தங்கள் துணையுன் எப்பொழுதுமே ஓர் ஆழமான தொடர்பை பேண விரும்புகிறார்கள். அதுமாத்திரமின்றி இவர்கள் மிகவும் உள்ளுணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உறவில் இணைப்பையும் பராமரிப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தங்கள் துணைக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்.
image - Her view from home
மகரம்
எந்தவொரு விடயத்திலும் ஒழுக்கத்தையும் கவனத்தையும் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அதனால் நீண்ட கால உறவில் பொறுமையுடனும் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.
மீனம்
இவர்கள் கற்பனைத்திறன் மிகுந்தவர்களாகவும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையின் கண்ணோட்டத்தில் விடயங்களை பார்க்கத் தயாராக இருக்கும் இவர்களிடம் பொறுமை மிக அதிகமாகவே இருக்கின்றது.