சுக்கிரப் பெயர்ச்சி 2023: வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!
சுக்கிரன் ஒளி பொருந்திய கிரகம் சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர்.
சுக்கிர பெயர்ச்சியில் எல்லாக் கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன.
அதேபோல இந்த ஆண்டிற்காக சுக்கிரப் பெயர்ச்சியானது இன்றைய தினம் மதியம் 1.49 மணிக்கு இடம்பெயரவுள்ளார். இன்றிலிருந்து இந்த மாதம் 30ஆம் திகதி வரை மிதுன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.
மிதுன ராசியில் இருக்கும் சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைக் கொடுக்க இருக்கிறார். அந்த ராசிக்காரர்களான,
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரப் பெயர்ச்சியானது உங்களுக்கு நற்பலன்களை மாத்திரம் கொண்டு வருகின்றது. சுக்கிரப் பெயர்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை சுற்றுலா, பொழுதுபோக்கு , மகிழ்ச்சி என அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். காதல் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சியானது சிறப்பானதாக அமையவுள்ளது. இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மற்றும் சொத்து வாங்கும் விஷயம் என அனைத்திலும் உங்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாராத்திலும் அதிக முன்னேற்றம் காண்பீர்கள். பணம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும்.
சிம்மம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், தொழில் செழிக்கும். இதனால் வருமானம் அதிகரிப்பதுடன் குடும்ப கஷ்டங்கள் நீங்கும், நீண்ட நாட்கள் வரன் கிடைக்காமல் கஷ்டப்படும் நபர்களுக்கு நினைத்தபடி வாழ்க்கை அமையும்.ஏற்கனவே திருமணமான நபர்களுக்கும் குடும்ப பிரச்சனைகள் நீங்கி தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.
துலாம்
துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இவரின் சஞ்சாரத்தால் உங்களுக்கு திடீரென பணவரவு, இலாபம் எனக் கிடைக்கும். உங்கள் பாட்டன் பூட்டன் சொத்துக்கள் எல்லாம் கிடைக்கும். தொழிலிலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
மீனம்
மீனராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரப்பெயர்ச்சியானது பல நல்ல வாய்ப்புக்களை கொடுக்கின்றது. இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம், வீடு, நிலம் என வாங்கும் வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் அதிக ஒத்துழைப்பக்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.