குடும்பத்தில் மறைக்கப்பட்டுள்ள வாழ்க்கையின் சில தத்துவங்கள்! வாங்க பார்க்கலாம்
நமது முன்னோர்கள் “ நீரின்றி அமையாதது உலகு” என கூறுவார்கள். ஆனால் நான்,“குடும்பம் இன்றி அமையாதது உலகு” என கூறுவேன்.
வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என வெளியில் தேடுபவர்கள். எங்கு துளைத்திருப்பார்கள் தெரியுமா? அது குடும்பத்தில் தான்.
பொதுவாக ஒரு சமூகத்திலுள்ள ஒரு முக்கியமான அழகு என்றால் அது குடும்பம் தான். “குடும்பம்” என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கை இன்றியமையாத ஒன்றாகவும் இருக்கிறது.
ஒரு குழந்தை பிறந்து அது வளர்ந்து, படித்து, தனக்கான ஒரு துனையை தேடி, திருமணம் செய்து, திரும்ப குழந்தைகளை பெறுவது என அனைத்து செயற்பாட்டிலும் குடும்பம் பங்கு வகிக்கிறது.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து அழகிய குடும்பத்தை உருவாக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து உறவுகள் ஒன்றினைந்து கூட்டு குடும்பம், தனி குடும்பம் என இரண்டு அழகுகளாக பிரிகிறது.
1. கூட்டு குடும்பம்
ஒரு ஆண், பெண், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இருப்பது கூட்டு குடும்பம்.
1. தனி குடும்பம்
ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் குழந்தைகளுடன் இருப்பது தனிக்குடும்பம் எனப்படுகிறது.
அந்த வகையில் அழகிய குடும்பம் உருவாக வேண்டும் என்றால் அதற்கு மூன்று விடயங்கள் கண்டிப்பாக தேவை. இது குறித்து நாம் பூரண விளக்கத்துடனும் இருக்க வேண்டும்.
1. விட்டு கொடுப்பு
2. அணுசரிப்பு
3. பொறுமை
1. விட்டு கொடுப்பு
நாம் வீடுகளில் நம்முடைய சொந்தங்களுடன் ஒரு பொருளுக்காக நிறைய சண்டைகள் போட்டிருப்போம். ஆனால் அந்த சண்டைகள் காலப்போக்கில் ஒரு உறவையே இல்லாமல் செய்து விடும் என்றால் நம்ப முடிகிறதா?
ஆமா, வாழ்க்கை எல்லா விடயங்களையும் விட்டு கொடுக்க வேண்டும் என கூறவில்லை. ஆனால் உறவுகளுக்காக சில விடயங்களை விட்டு கொடுக்கலாம் இது ஒன்று அவ்வளவு தவறு இல்லை.
2. அணுசரிப்பு
குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்பார்கள். இது உண்மையான ஒன்று. ஒரு குடும்பம் என்றால் அதில் ஆயிர விடயங்கள் இருக்கும். அதனை அணுசரித்து வாழ்க்கையின் அர்த்ததை சாதித்து காட்டுபவன் மட்டுமே இன்று சிகரத்தை தொடுகிறான்.
வாழ்க்கையில் பல விடயங்கள் நடக்கும், சண்டைகள், பிரிவுகள், துயரங்கள், கவலைகள் என ஏராளமான அலைகள் வந்தாலும் அணுசரிப்பு என்ற ஒரு தடை உங்களிடம் இருந்தால் நீங்கள் தான் இந்த உலகின் வெற்றியாளன்.
3.பொறுமை
“பெண்ணுக்கு தேவை பொறுமை” எனக்கூறுவார்கள். ஆனால் சில பெண்களிடம் இதனை பணம் கொடுத்தாலும் எதிர்பார்க்க முடியாது. ஒரு பிரச்சினை என்றால் இதனை இப்பவே முடித்து விட வேண்டும் என முயற்சிப்பார்கள்.
ஆனால் அதில் பதற்றத்தில் சில தவறுகளையும் விட்டிருப்பார்கள். இதுவே நாளைக்கு பெரிய பிரச்சினையாக வந்து நிற்கும். எனவே பொறுமை தான் வெற்றியாளனின் முக்கியமான ஆயுதம்.
நமக்கான நேரம் நம்மை நோக்கி வரும் அது வரை பொறுமையாக இருக்க வேண்டும் பொறுமை இழந்தவன் வீதியிலே... இதனை காலங்கள் கடந்தாலும் மறந்து விட கூடாது. ஆயிரம் முயற்சிகள் செய்து அடைய முடியாத ஒன்றை பொருமையாக இருப்பவன் நேரம் பார்த்து அடைந்து விடுவான்.
அழகான குடும்பத்திற்கே உரித்தான் சில விடயங்கள்
1. நாம் வெளியில் பெற்ற அறிவை பயன்படுத்த ஏற்ற இடம் என்ன தெரியுமா? குடும்பம்.
2. இந்த உலகில் மிகவும் புனிதமான உறவு என்ன தெரியுமா? கணவன் - மனைவி
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது.
7. குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் “பொறுத்தலும், மறத்தலும்” அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால் “அவரவர் அடிமனமே” தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகும்.
10. நல்ல குடும்பத்தில் “நன்மக்கள்” தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.