தலைமுடி பளபளவென மின்ன வேண்டுமா? உங்களுக்கே இந்த டிப்ஸ்
இன்று பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சினை தான் முடி உதிர்தல், வறண்ட கூந்தல் ஆகும்.
முடியை பட்டுபோல வைப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்வோம். இதற்காக பல எண்ணெய்கள், ஷாம்புகள் என அடிக்கடி மாற்றிக்கொள்வோம்.
ஆனால் இது தவறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தலைமுடியை பட்டுப்போலவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதற்கு இயற்கையான பேஸ்ட் உதவுகின்றது.
இந்த பிரச்சினையிலிருந்து தீர்வு அளிக்கும் பேஸ்ட் செய்வதற்கு நமக்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் தேவையில்லை. பேஸ் செய்வதற்கான பொருட்கள், எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி
தண்ணீர்
10 மில்லி – விளக்கெண்ணெய்
செய்முறை
நெல்லிக்காய் தூளை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று மாற்றிக்கொள்ளவும். தலைமுடியின் நீளத்தைப் பொறுத்து, 10 மில்லி விளக்கெண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பேஸ்ட்டை உச்சந்தலையிலும், முடியிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு சாதாரண ஷாம்பு கொண்டு கழுவவும்.
பின்பு ஆறு அல்லது 8 மணிநேரம் கழித்தோ அல்லது மறுநாளோ ஷாம்பு போட்டு அலசவும். இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் உங்கள் முடி பளபளபாக்கவும், கருமையாகவும் காணப்படும்.