பேன் அதிகமாக தொல்லை கொடுக்குதா...இனி கவலைய விடுங்க!
தலைமுடி பிரச்சினைகளில் பேன் தொல்லையானது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
இந்த பேன் தொல்லையானது நம்மை எந்தவொரு விடயத்திலும் சரியாக ஈடுபட விடாது. அது கல்வியாக இருந்தாலும் சரி, அல்லது வேலையாக இருந்தாலும் சரி எதிலும் முழுமையான ஈடுபாட்டை செலுத்த முடியாது.
சரி இனி பேன் தொல்லையிலிருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம் எனப் பார்ப்போம்...
image - jegannews 24
பொருட்கள் பகிர்தலைத் தவிர்க்கவும்
குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சீப்பு மற்றும் டவல்கள் இருப்பது முக்கியம். டவல், தொப்பிகள், சீப்பு என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்வதை தடுக்க வேண்டும்.
பேன் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்
உச்சந்தலை, கழுத்து, காதுகளின் பின்புறம் என்பவற்றில் பேன் இருக்கின்றதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
image - Nottingam post
முடியை நன்றாக அலச வேண்டும்
தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.
சுத்தத்தை பேண வேண்டும்
தலையணை, தொப்பி, டவல், சீப்பு என்பவற்றை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.