இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
முடி உதிர்தல் பிரச்சினை எல்லாருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.
பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் மிளகு! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
என்னன்னமோ ஆயில் தேய்த்தாலும் தலை முடி மறுபடியும் வளராத சோகத்தில் தான் நாம் இருப்போம். இந்த பிரச்சினைக்கு பெரிதான தீர்வை தேடி போக வேண்டும் என்றே அவசியமே இல்லை.
உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் நிறைய அழகு பராமரிப்பை நமக்கு கொடுக்கிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ தலைமுடியின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான போஷாக்காகும்.
உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி வாருங்கள்.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும்.
பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் சொட்டை தலையில் கூட முடி வளரும்.
You May Like This...