அசுர வேகத்தில் தலைமுடி நன்றாக வளரவைக்கும் மூலிகை!
தலைமுடி கொட்டுகிறதா? ஆங்காங்கே வழுக்கையாக இருக்கின்றதா? பொடுகுத் தொல்லையா?
தலைமுடியில் மட்டுமின்றி, புருவம், மீசை, தாடி போன்றவற்றிலும் புழுவெட்டு காணப்படுகிறதா?
அத்தனை பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடிய அற்புதமான மூலிகை மருந்தொன்றை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை கரிசலாங்கண்ணி
வெட்டிவேர்
செய்முறை
ஆட்டுப்பாலை சூடுபடுத்தி காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணியை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெட்டிவேரை நன்றாக பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
ஆட்டுப்பாலை சிறிய பௌலில் ஊற்றி அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணியை இரண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பொடி செய்து வைத்துள்ள வெட்டிவேரை அரை ஸ்பூன் அளவுக்கு பாலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைதைதையும் நன்றாக தண்ணீர் பதத்துக்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
வெயில் நேரத்தில் நன்றாக தலையில் தேய்த்துவிட்டு ஒரு மணித்தியாலம் அப்படியே விட்டுவிடுங்கள். பின்பு கழுவிக் கொள்ளலாம்.
இதை வாரத்துக்கு இரண்டு முறை உபயோகித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இது கண் பார்வை பிரச்சினைகளையும் சரி செய்யும்.