கொழுப்பை கரைக்கும் அற்புத காய்! அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்
உணவாகப் பயன்படும் கொடி வகையை சார்ந்த கோவக்காய், Cucurbitaceae என்னும் பண்படுத்தாத (rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
இதன் காய், பழம் உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது, இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர்.
கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்
புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்
மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்
கோதிலாக் கோவையிலைக்கு (அகத்தியர் குணபாடம்) என எழுதப்பட்டுள்ளது.
ஓடிப்போகும் அதிக எடை! ஓமத்தை இப்படி எடுத்து கொண்டாலே போதும்
கண் நோய் குணமாக
ஐம்புலன்களில் முதன்மையானதாக இருக்கும் கண்களை பாதுகாப்பதில் கோவைக்காய் அதிகம் பங்காற்றி வருகின்றது.
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதுடன் கண் நரம்புகள் பலப்படவும் செய்கின்றது.
ஒரே நாளில் முகப்பருவை போக்கனுமா? இதோ அட்டகாசமான டிப்ஸ்!
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
இரத்தம் சுத்தமடைய
இன்றைய உணவு பழக்கம் மற்றும் மாசுபாடு இவற்றினால் நம உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது.
மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
ஷவர்மா உண்மையில் ஆபத்தான உணவா? உண்மை என்ன? விரிவான ரிப்போர்ட்
உடல் சூடு சமநிலையிலிருக்க
சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.
ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க.
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம்.
முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு! எது ஆரோக்கியமானது?
மன அழுத்தத்தினால் ஆண்மை கோளாறு
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வரும் நிலையில், ஆண்மை கோளாறு பிரச்சினையையும் சந்தித்து வருகின்றனர். இதனால் திருமணம் செய்வதற்கு சிலர் பயந்து வேண்டாம், சிலரோ இந்த பிரச்சினையை மறைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் பின்னாளில் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் மணவாழ்க்கை விவாகரத்து வரை சென்று விடுகின்றது.
இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
இரவில் படுப்பதற்கு முன் சிறிது பனங்கற்கண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
எடையை குறைக்க
நேரத்திற்கு உணவு உண்ணாமல், துரித உணவுகளை வாங்கி உண்ணுதல் என மக்கள் அடிமையாகி வருவதால் உடல் எடையும் தாறுமாறாக அதிகரித்து அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.
பின்பு உடலை குறைத்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, பலவித டயட் மற்றும் மருத்துவ ஆலோசனை என பணத்தினை தண்ணீராக செலவழித்து வருகின்றனர்.
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
மீண்டும் விஷமான ஷவர்மா: தீவிர சிகிச்சை பிரிவில் தமிழக மாணவர்கள்
நீரிழிவு நோயாளிகளுக்கு
தற்போதைய காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் நீரிழிவு நோய் ஆட்டிப் படைத்து வருகின்றது. முன்பு காலத்தில் மிகவும் அரிதாக பெரியவர்களுக்கு மட்டும் காணப்பட்ட இந்த நீரிழிவு நோய் இன்று இளம் வயதினரையும் விட்டு வைக்காமல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனது.
சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு நோயின்றி வாழ வேண்டுமா? பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதயத்துக்கு நல்லது
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
சுகரை ஓட ஓட விரட்டும் வெண்டைக்காய்: வெயில் காலத்தில் சாப்பிட்டால் ஆபத்தா?
கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும்
கல்லீரல் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு மிக முக்கியமானது. கல்லீரல் நச்சுத்தன்மையை தடுக்கவும், வெளியேற்றவும் கோவக்காய் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் கோவக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறையக்கூடும்.