சுகரை ஓட ஓட விரட்டும் வெண்டைக்காய்: வெயில் காலத்தில் சாப்பிட்டால் ஆபத்தா?
`வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்' என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது.
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல்நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது.
இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது.
வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம்.
வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
கோடைகாலத்தில் நீங்கள் உணவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செரிமான பிரச்சனைகள் முதல் தோல் நோய்கள் வரை அதிகம் வரக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் சரியான உணவுமுறையை பின்பற்றினால் நோய் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.
பச்சைக் காய்கறிகளைப் பொறுத்தவரை உடலுக்கு எப்போதும் தீங்கானவைக் கிடையாது. எந்த காலத்திலும் நீங்கள் வெண்டைக்காயை சாப்பிடலாம்.
அதனால், வெண்டைக்காயை கோடைகாலத்தில் சாப்பிடக்கூடாது என்ற எந்த விதிமுறையும் கிடையாது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்துகள் உள்ளன.
கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம்
கொலஸ்ட்ரால் குறையும்
மற்ற காய்கறிகளைப் போலவே வெண்டைக்காயிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெண்டைக்காயில் கூடுதலாக பெக்டின் என்ற தனிமம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் சமநிலையில் இருந்தால் மாரடைப்பு அபாயம் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொப்பையை சட்டென கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்!
சர்க்கரை கட்டுப்பாடு
வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். செரிமான அமைப்புகள் சரியாகும் நேரத்தில், ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும்.
புற்று நோய் பாதிப்பு
மற்ற காய்கறிகளை விட வெண்டைக்காயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மை வெண்டைக்காய்க்கு உண்டு. செரிமான மண்டலம் சீராக இருக்கும்போது வயிற்றில் புற்றுநோய் ஆபத்துகள் வராது.
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்க
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
அல்சருக்கு நல்ல மருந்து
வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
முகப்பருவால் ஏற்படும் தழும்புகளை மறைக்க வேண்டுமா? இதோ சூப்பரான 10 வழிகள்!
மலச்சிக்கலுக்கு தீர்வு
வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும். மலச்சிக்கலும் தீரும். வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கண்பார்வை மேம்படும்.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?
வெண்டைக்காயை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். வெண்டைக்காயிலும் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளன, எனவே இது சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
நீங்கள் முட்டை அதிகமாக உண்ணும் நபரா ? உஷாரா இருங்க!
நீரில் ஊற வைத்த வெண்டைக்காய்
இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், ஆஸ்துமா கோளாறு சரியாகும்.
தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதிசயத்தை காணலாம்
வெண்டைக்காய் சூப்
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்.
முற்றிய வெண்டைக்காய் மூன்று, ஒரு தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.
பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வெண்டைக்காயில் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருள்கள்
- வெண்டைக்காய் - 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
போனில் எச்சில் துப்பி இளம்பெண் செய்த அசிங்கம்: முகம்சுழிக்கும் காட்சி
அரைக்க
- தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
- தக்காளி -1
- பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
- சீரகம் - 2 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 3
தாளிக்க
- கடுகு - 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 3
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பில்லை – சிறிது
நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்
செய்முறை
வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறிக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியவுடன் இறக்கி பரிமாறவும்.
பிபி ஜோடியில் தாமரை கணவர் போட்ட ஆட்டம்! தலையில் அடித்துக்கொண்ட ரம்யாகிருஷ்ணன்