வாழ்நாள் முழுவதும் இதயநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்
நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் இதயம்.
இது இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. நம் உயிர் நாடியாக விளங்கும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
அதிலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
தற்போது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். இந்த நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே நீங்கள் சமைக்கும் சமையலில் ஆலிவ் ஆயிலை முயற்சிக்கலாம்.
சால்மன் மீன்
சால்மன் மீன் இதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த ஒன்று. இந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட அழற்சி நீங்குகிறது. இது உங்க இரத்த அழுத்தம், கொழுப்பு குறைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தை குறைக்கிறது.
கீரைகள்
கீரைகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். எனவே இந்த கீரைகள் உங்க சூப், பொரியல் இவற்றில் பயன்படுத்தி வரலாம். கீரைகள் உங்களுக்கு இரும்புச் சத்து, நார்ச்சத்து என முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவது உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
image: goodhousekeeping
பீன்ஸ்
பீன்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த உணவும் கூட. சூப்கள், சாலடுகள், மற்றும் பாஸ்தா உணவுகள் இவற்றில் பீன்ஸ் களை நீங்கள் சேர்த்து வரலாம். இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சாதாரண இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள், கொழுப்பைக் குறைக்கும் தாவர ஸ்டெரோல்களை கொண்டுள்ளது.