காதலிக்கவே பயப்படும் டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காதல் என்ற அற்புதமான உணர்வை அனுபவித்திருக்கக்கூடும்.
காதல் என்ற நாமமே அறியாமல் வாழ்ந்து முடித்தவர்கள் மிகவும் அரிது.அப்படிப்பட்ட நபர்களே இல்லை என்றால் மிகையாகாது.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களை காதலில் விழவைப்பது மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.இவர்கள் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே அங்கிருந்து தப்பித்து விடுவார்களாம்.
அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பதுடன் அவர்கள் ஏன் காதலில் இருந்து விலகி இருக்க நினைக்கின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அனால் இவர்களின் அதிக உணர்ச்சிவசப்படும் தன்மை காரணமாக காதலை வெளிப்படுத்த பெரிதும் தயங்குவார்கள். அவர்களின் மென்மையான குணத்தால் பல சமயம் மற்றவர்களின் வார்த்தைகளால் காயப்படுகின்றார்கள்.
இவர்கள் காதலை கண்டு அஞ்சுவதற்கும் காதயை வெளிப்படுத்த தயங்குவதற்கும் இவர்களின் கடந்த கால கசப்பாக அனுவங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இவர்களின் காதல் உண்மையானதாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே முழுமைக்கும், நேர்த்திக்கும் பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் மற்றவர்களிடம் அதே நேர்த்தியை எதிர்ப்பார்ப்பதால், காதல் விடயத்தில் ஒரு முடிவெடுப்பதற்கு அதிகம் பயப்படக்கூடும்.
பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற இவர்களின் எண்ணத்துக்கு பொருத்தமான வாழ்க்கை துணை கிடைக்கும் வரையில் காத்திருக்க தயாராக இருப்பார்கள். இதனால் இந்த ராசியினரை காதலில் விழ வைப்பது மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரத்தன்மைக்கும், மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் ரகசியம் காப்பதில் படு கில்லாடிகளாக அறியப்படுகின்றார்கள்.
இருப்பினும், காதலில் விழுவது குறித்த அவர்களின் பயம், தங்களை முழுமையாக வெளிப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை பற்றி அதிகமாக சிந்திப்பதன் விளைவாகவே எழுகின்றது.
இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து போகும் குணம் சற்று குறைவாக இருக்கும்.மேலும் இவர்கள் யாராலும் காயப்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் காதல் என்றாலே ஓடிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |