வெளியானது லியோ திரைப்படத்தின் புதிய அப்டேட்....
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.
இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இப்படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்துள்ளார்.
image - paytm
இந்நிலையில் இப்படத்தில் நடிகர்கள் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர்.
தமது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் மன்சூர் அலிகான்.
image - B4blaze
இவர் இப்படத்தில் நடிக்கின்றார் என்று கூறியபோதும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமலே இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி நடிகர் மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.
image - mirchi 9