லியோ திரைப்படத்தில் ஜனனியின் கதாபாத்திரம் இதுதானா?
இலங்கைப் பெண்ணான ஜனனி விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான, பிக்பொஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மறுபடியும் விஜய் லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளமை அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என்று அனைவரும் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜனனி, லியோ திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
சமீபத்தில் விஜய் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்க்கு நன்றி தெரிவித்திருந்தார் ஜனனி. இந்நிலையில் லியோவில் விஜய்யின் ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார்.
இந்நிலையில் ஜனனி நடிகர் விஜய்க்கு மகளாக நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் இந்தத் தகவல் எந்தளவுக்கு உண்மை என்று படம் திரைக்கு வந்தால்தான் தெரியும்.