விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் புதிய அப்டேட்: உற்சாகத்தில் படக்குழுவினர்
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை ரசிகர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். தந்தை இயக்கிய வெற்றி படத்தில் ஆரம்பித்து தற்போது தளபதி 68 வரைக்கும் வெற்றியுடன் நடைப்போட்டுக்குக் கொண்டிருக்கிறார் விஜய்.
விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.
பிறந்தநாள் ஸ்பெஷல்
இந்நிலையில் விஜய் தனது 49ஆவது பிறந்த தினந்தை இன்று கொண்டாடி வருகின்றார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்தள்ளனர்.
மேலும், இந்தப் பாடலை விஜய் பாடியிருப்பதாகவும் சுமார் 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ungal #Vijay paadiya paadal ?#LeoFirstSingle is releasing Today at 6.30 PM ?#NaaReady #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial @immasterdinesh @SonyMusicSouth #LEO#HBDThalapathyVIJAY pic.twitter.com/RnmMgUT5ta
— Seven Screen Studio (@7screenstudio) June 22, 2023
இந்த அறிவிப்பைக் கேட்டதும் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |