அஜித்தின் ரீல் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: அதிர்ந்துப் போன ரசிகர்கள்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் அளவிற்கு நடிக்க ஆரம்பித்திருக்கும் அஜிந்தின் ரீல் மகளிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனிகா சுரேந்திரன்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமான அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் நடித்ததன் பின்னர் அஜித்தின் ரீல் மகளாக பிரபலமானார். அதன் பின்னர் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்-நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்து நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த அனிகா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கதாநாயகியாகவும் மலையாளப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
இந்நிலையில் தற்போது பொள்ளாச்சி பகுதியில் திடீரென அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இவரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
அந்தப் போஸ்டரில் அவருக்கு 16.07.2023ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தவர்கள் முன்னதாகவே போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களே என பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இவர் கலந்து கொள்ள இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அந்த திரைப்படத்தில் இவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.