நாள்பட்ட சளியை உடலை விட்டு இறக்க வேண்டுமா? ரசத்தில் இதை சேர்த்து செய்தால் போதும்
வெயில் காலத்திலும் சரி மழை காலத்திலும் சரி காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உடலிலும் ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்து ரசம் செய்து குடிக்கலாம்.
இதனால் நாள்பட்ட சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் வராது. இந்த பதிவில் இஞ்சி மற்றும் எலுமிச்சை வைத்து எப்படி ஒரு காரசாரமான ரசம் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- துவரம் பருப்பு – ஒரு கைப்பிடியளவு
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 2
- எலுமிச்சை – 1
- இஞ்சி – ஒரு இன்ச்
- மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- வெல்லம் – அரை ஸ்பூன் (பொடித்தது)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. முதலில் துவரம் பருப்பை குக்கரில் நன்றாக குழையும் படி வேக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதன் பின்னர் இஞ்சி மற்றும்சீரகத்தை சின்ன உரலில் சேர்த்து கொரகொரப்பாக இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
2. இதன் பின்னர் தக்காளியை நான்காக நறுக்கி, பச்சை மிளகாயை இரண்டாக கீறி தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
3. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவேண்டும்.
4. அது நன்றாக பொரிந்தவுடன், பச்சை மிளகாய் சேர்த்து சொஞ்ச நேரம் வதக்கி, பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும்.
5. இதில் இடித்த இஞ்சி மற்றும் சீரகத்தைப் போட்டு நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர் வேக வைத்த துவரம் பருப்பை போட்டு தண்ணீர் விட்டு வெல்லத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவேண்டும்.
6. .தன் பின்னர் தக்காளி வெந்து நீர் கொதித்து திரளும் போது அடுப்பை குறைவான தீயில் வைத்து எலுமிச்சை சாறை சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு இறக்கினால் போதும் . சுவையான இஞ்சி, எலுமிச்சை ரசம் தயார்.
இதன் கமகம மணத்திலேயே சாப்பாடு சாப்பிடலாம். இந்த ரசத்தை குழைந்த சுடு சோற்றில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அப்பளம் வைத்து நொறுக்கி சாப்பிட்டால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |