பார்ப்பவரை ஈர்க்கும் பட்டுபோன்ற கூந்தல் வேண்டுமா?கொரியர்களின் ஹேர் மாஸ்க் போதும்
பெண்களை அழகாக காட்டுவது தலைமுடி தான். எனவே தலைமுடி உதிர்வதை குறைத்து பார்ப்பவரை ஈர்க்க செய்யும் கூந்தல் கிடைக்க கொரியர்கள் பயன்படுத்தும் ஒரு ஹேர் மாஸ்க் போதும். இதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கொரியர்களின் ஹேர் மாஸ்க்
சந்தையில் மிகவும் தலிவாக கிடைக்கும் பழம் வாழைப்பழம். வாழைப்பழம், பளபளப்பான முடிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.
இது தலைமுடியை வலுப்படுத்துதல் மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் காணப்படுகின்றது.
இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. முடி உதிர்வையும் தடுக்கிறது. இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க் கொரிய பெண்கள் ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்துகின்றனர்.
அவகேடோவில் பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது முடியை மென்மையாக்கி, பட்டுப்போன்ற மிருதுவான தன்மையை கொடுக்கும்.
எனவே வாழைப்பழம் 1 அவகாமொ 1 எடுத்து மசித்து தலையில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தேங்காய் எண்ணெய் முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை தரும். வாழைப்பழத்தை 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும்.
சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற விடவும். இது உங்கள் முடியை ஈரப்பதமாக்கி, வறட்சியை குறைக்கும். என்னதான் வாழைப்பழம் அதிக நன்மை தந்தாலும் அதை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில் பக்க விளைவுகள் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
