அஜீரத்தை குணமாக்கும் லேகியம் - வாரம் நான்கு முறை சாப்பிடுங்க
நாம் அதிகமாக இனிப்புக்கள் அரிசி மாவில் செய்த பலகாரங்களை பண்டிகை நாட்களில் அதிகமாக சாப்பிடுவோம். இது தவிர வீட்டில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டில் வேலைகள் இல்லாத நேரத்தில் பல பலகாரங்களை சாப்பிடுவார்கள்.
இது உடல் நலத்திற்கு கேடு. இவை அனைத்திலும் இருக்கும் எண்ணெய் மற்றும் சக்கரை குடல் கோளாறுகளை கொண்டு வரும். இந்த குடல் கோளாறுகளை தவிர்க்க நம் முன்னோர்களால் செய்து சாப்பிட்டு வந்தது தான் இந்த லேகியம்.
இதை நாம் கொஞ்சம் சாப்பிட்டால் போது அஜீரணம் முதற்கொண்டு வயிற்று கோளாற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். இதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தனியா விதை - 1 tsp
- மிளகு - 1/2 tsp
- சீரகம் - 1/2 tsp
- ஓமம் - 1/2 tsp
- காய்ந்த இஞ்சி - 1/4 tsp
- நல்லெண்ணெய் - 1 tsp
- வெல்லப் பாகு செய்ய
- வெல்லம் - 1/3 கப்
- தண்ணீர் 1/4 கப்

செய்முறை
இதை செய்ய தனியா, மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை தொடக்கூடிய சூடு பதத்தில் 2 - 3 நிமிடங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இறுதியாக இஞ்சி சேர்த்து வதக்கிவிட்டு சூடு பதத்தை காய வையுங்கள்.
பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு உருக வைத்து வெல்லப்பாகு தயார் செய்துகொள்ளுங்கள்.

பின்னர் வெல்லம் உருகியதும் வடிகட்டி மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அரைத்த பொடியை கிளறிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்.
கட்டிகளாக இருக்கக் கூடாது. இதை நன்கு கலந்துவிட்டதும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். இறுதியாக நல்லெண்ணெய் விட்டு உடனே அடுப்பை அணைக்க வேண்டும்.
அவ்வளவுதான் அதை சூடு பதத்திலேயே ஒரு டப்பாவில் மாற்றிவிட்டு சூடு ஆறியதும் மூடிவிடுங்கள். இதை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் இருக்காது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |