மீந்து போன சாதம் நிறைய இருந்தால் தூக்கி போடாமல் ரொட்டி செய்வது எப்படி?
பொதுவாக காலையில் உணவு தயாரிக்கும் பொழுது இரவு ஏதாவது மீந்த போனது இருக்கிறதா? அதனை வைத்து என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தித்து கொண்டிருப்போம்.
உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் நிறைய இருந்தால் சாதத்தை வைத்து கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி செய்யலாம்.
இது செய்வதற்கு இலகுவாக இருந்தாலும் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த அக்கி ரொட்டியை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அந்த வகையில், சாதத்தை வைத்து கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீந்து போன சாதம் - 1/2 கப்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - சுவைக்கேற்ப
- துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
ரொட்டி தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் மீந்து போன சாதத்தை போட்டு, நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளலாம்.
அதன் பின்னர் துருவிய தேங்காய், அரிசி மா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகிய பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாழை இலை அல்லது கவரை எடுத்து, அதில் நல்லெண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் சாதத்தை சிறிய உருண்டையாக பிடித்து தண்ணீர் தொட்டு, தட்டையாக தட்டி வைக்கவும்.
இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், நல்லெண்ணெய் சிறிது ஊற்றி தட்டி வைத்திருக்கும் ரொட்டியை கல்லில் போட்டு பொன்னிறமாகும் வரை வேக விட்டு இறக்கவும். ரெசிபிப்படி சரியாக செய்தால் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
