Neeya Naana: சமையலில் அசத்தும் அப்பாக்கள்.. அரங்கத்தில் அசந்துபோய் நின்ற கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுக்கும் அப்பாக்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுக்கும் அப்பாக்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் அப்பாக்கள் பிள்ளைகளுக்காக மூன்று வேளையும் சமையல் செய்து அசத்தியுள்ளனர். அப்பா செய்து கொடுக்கும் சாப்பாத்தியை அடிச்சிக்கவே முடியாது என்று மகள் அரங்கத்தில் கூறியுள்ளார்.
மற்றொரு பெண் தனது அம்மா வைக்கும் உளுந்தம் பருப்பு சோற்றை விட அப்பா வைப்பது அவ்வளவு சுவையாக இருக்கும். அம்மா வைப்பதை வாயில் கூட வைக்க மாட்டேன் என்று கூறினார்.
மகள்கள் அப்பாவின் சமையலைக் குறித்து அடுத்தடுத்து கூறுவதைப் பார்த்து கோபிநாத் ஆச்சரியப்பட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |