மீந்துபோன இட்லியை கொண்டு உப்புமா மட்டுமல்ல இப்படியும் செய்யலாம்!
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். இப்படி சாப்பிடும் இட்லி மீந்துபோய்விட்டால் தூக்கி போடாமல் இப்படி ஒரு ரெசிபி செய்தால் மிச்சம் இல்லாமல் போகும்.
தேவையான பொருட்கள்
- இட்லி
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லி தூள் – 1 ஸ்பூன்
- சோயா சாஸ் – 1 ஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
மீந்துபோன இட்லியை எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இட்லி பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள இட்லியை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பின் அதில் 1/2 ஸ்பூன் சீரகம், கருவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். பின் அதில் பொடிபொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் மிகளாய் தூள், மல்லி தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் நாம் பொறித்து எடுத்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 2 நிமிடம் வரை கலந்துவிட வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி சுடச்சுட பரிமாற வேண்டும்.