கேன்சரை ஏற்படுத்தும் மிளகாய்பொடி! இதை கண்டிப்பா செய்து பார்த்திடுங்க
இன்று பெரும்பாலான உணவுப்பொருட்களில் கலப்படம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனை எளிதில் அடையாளம் கண்பது என்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கின்றது.
இந்தியாவில் தமிழ்நாடைப் பொறுத்தவரையில் மிளகாய் தூள் இல்லாத குழம்பு வகைகளைக் காண்பது மிகவும் கடினம். ஆம் காரசாரமான உணவு பிரியர்களுக்கு மிளகாய் தூள் என்பது சமையலையில் முக்கிய பொருளாகும்.
முந்தைய காலத்தில் மசாலா வகைகளை வீட்டிலேயே பொருட்களை வாங்கி பக்குவம் செய்து அதனை மிஷினில் அரைத்து தயார் செய்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் அனைத்தும் கடைகளில் ரெடிமேடாகவே தான் வாங்குகின்றனர்.
போலி மிளகாய் பொடியினை கண்டுபிடிப்பது எப்படி?
மிளகாய் தூளில் 'சூடான் டை' என்ற வேதிப்பொருளை தற்போது கலந்து வருவதால், இவை புற்றுநோயை ஏற்படுத்துவது மட்டுமின்றி வயிற்று பிச்சினையையும் கொண்டு வருகின்றது.
ஆம் சிவப்பு மிளகாய் பொடி மூலம் நல்ல லாபம் ஈட்ட வர்த்தகர்கள் கலப்படம் செய்வதில் இறங்கியுள்ளனர். செங்கல் தூள், செயற்கை நிறமூட்டிகள், பழைய மற்றும் கெட்டுப்போன மிளகு, சுண்ணாம்பு தூள் ஆகியவை போலி மிளகாய் தூளில் சேர்க்கப்படுகின்றன.
இது மாதிரியான போலிகளைக் கண்டு மக்கள் ஏமாறாமல் இருக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சில வழிமுறைகளை கூறுகிறது.
ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து அதில் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இது கரைந்ததும் சிவப்பு நிறம் தனியாக வந்தால் கலப்படம்.
அடியில் உள்ள மிளகாய் தூளின் மிச்சங்களை கைகளில் தேய்த்து பாருங்கள். கரடுமுரடானதாக நீங்கள் உணர்ந்தால், அதில் செங்கல் தூள் இருப்பதாக அர்த்தம்.
உங்கள் கைகளில் சோப்பு போல் வழுவழுப்பாக இருந்தால், அதில் சோப்பு பொருள்கள் கலந்திருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.