இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பர் ரெசிபி: ஈஸியாக செய்யலாம் தக்காளி சட்னி!
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 1கிலோ
பூடு - 15 பற்கள்
கடுகு - 1 தேக்கரண்டி
பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளிப்பழங்களை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து இரண்டாக வெட்டிய தக்காளிப் பழத்தை பாத்திரத்தில் வைத்து எண்ணெய் சேர்த்து இரு பக்கமும் வதக்கவும். லேசாக வதங்கியதும் 15 பற்கள் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டும் வதங்கியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு தாளிப்பதற்காக பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
பிறகு மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நிறம் மாறும் வரை கிளரவும்.
பின் முன்னதாக அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து கிளரி விட்டு 20 நிமிடம் வரை அவிய விடவும்.
20 நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு, சக்கரை சேர்த்து எண்ணெய் தனியாக வந்ததும் பாத்திரத்தை இறக்கிக் கொள்ளவும்.