வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Toronto Canada
By Nivetha Jul 13, 2022 10:51 PM GMT
Report

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான லீனா மணிமேகலை தொடர்பில் இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கனடாவின் ரொறன்ரோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்து.

இதன் ஒரு பகுதியாக சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Leena Manimekalai Problems

காளி வேடத்தில் இருக்கும் லீனா

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கிறார்.

இதனையடுத்து இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Leena Manimekalai Problems

அரஸ்ட் லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைங்களில் டிரெண்டானது.

பின்னர் லீனா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன்.

அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என பதிவிட்டிருந்தார்.

லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு 

அவர் மீது பொலிசாரும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ், இந்து கடவுளை இழிவுபடுத்தி வார்த்தையால் கூற முடியாத அளவிற்கு லீனா மணிமேகலை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், படத்தின் போஸ்டரில் கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Leena Manimekalai Problems

இவை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதி அபிஷேக் குமார் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என காளி திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.  

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Leena Manimekalai Problems

விடாது கருப்பாய்...தொடரும் சர்ச்சை 

விடாது கருப்பாய் லீனாவை சர்ச்சை தொடரும் நிலையில் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த லீனா மணிமேகலை கனடாவின் ரொரன்றோவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US